
======================================================
எழுத்தாளர் சுஜாதாவுடன் எனது நட்பு!
எனது அபிமான எழுத்தாளர் சுஜாதா அவர்கள் காலமாகிவிட்டார்
என்ற செய்து கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திருக்கிறேன்
அவர் குமுதத்தில் எழுதிய காலத்திலிருந்து (1966ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து)
சுமார் 16 ஆண்டு காலம் வரை அவருடைய சிறுகதைகளையும், தொடர்களையும்
படித்திருக்கிறேன். பரவசமடைந்திருக்கிறேன்.
அசத்தலாக எழுதுவார். நடையில் யாருக்கும் கைவராத லாவகம் இருக்கும்.
குமுதம் பத்திரிக்கையின் மூலம் அவருடன் கடிதத் தொடர்பு கிடைத்தது.
அப்போது அவர் டில்லி டிஃபன்ஸ் காலனியில் குடியிருந்தார். கடிதங்களுக்கு
உடனுக்குடன் பதில் எழுதும் பண்பாளர் அவர்
1974ஆம் ஆண்டு அவர் கோவை வந்திருந்தபோது அவரைச் சந்தித்து ஒருமணி
நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். அவரையும் மகிழ்வித்திருக்கிறேன்
சந்திப்பின் நினைவாக அவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார்
அதை இன்று வரை அவர் நினைவாகப் பத்திரமாக வைத்திருக்கிறேன்
நைலான் கயிறு என்ற அவருடைய முதல் தொடர்கதை அவருக்கு ஏராளமான
வாசகர்களைப் பெற்றுத்தந்தது.
1984ற்குப் பிறகு நான் புதினங்களையும், சிறுகதைகளையும் படிப்பதை
நிறுத்திவிட்டு கவியரசர் கண்ணதாசன், நூல்களையும், வேறு பல கவிஞர்
களின் கவிதை நூல்களையும் கந்தர் அலங்காரம் போன்ற அன்மீக நூல்
களையும், மற்றும் ஏராளமான ஜோதிடம், சுய முன்னேற்றம் போன்ற
நூல்களையும் படிக்கத் துவங்கியவுடன் அவருக்கும் எனக்கும் உள்ள
கடிதத்தொடர்பு நின்று விட்டது. அவரும் முன்புபோல பத்திரிக்கைகளில்
அதிகமாக எழுதாமல் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துவிட்டார்.
மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் எனக்கு நல்கவில்லை!
தமிழ்கூறும் நல்லுலகம் உள்ளவரையில் அவர் எழுத்துக்கள் நிலைத்து நிற்கும்!




7 comments:
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
Hi,
I met him in his bangalore residenace long back in my college days(1993).It was a nice experience.
serious readers in tamil expected a lot from him like "nagaram" short stroy,but his popularity didn't permit him eventhough he was capable of doing it.
May his soul rest in peace.
kannan
http://www.kannanviswagandhi.com
http://www.truemlmrockstar.com
/////துளசி கோபால் said...
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.///////
நிதர்சனமான உண்மை சகோதரி!
/////kannan said...
I met him in his bangalore residenace long back in my college days(1993).It was a nice experience.
serious readers in tamil expected a lot from him like "nagaram" short stroy,but his popularity didn't permit him eventhough he was capable of doing it.
May his soul rest in peace.
kannan
http://www.kannanviswagandhi.com///////
தங்கள் வருகைக்கும், அஞ்சலிக்கும் நன்றி நண்பரே!
எங்களது(!) தலைமுறைக்கு அவரின் எழுத்து ஒரு "டிரென்ட் செட்டர்" தான்!.
அவருக்கு நமது அஞ்சலிகள்!
இறந்தது அவர் உடல் அவரும் அவர் எழுத்தும் என்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு நல்ல இதங்களில்
////rahini said...
இறந்தது அவர் உடல் அவரும் அவர் எழுத்தும் என்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு நல்ல இதங்களில்////
நன்றி சகோதரி!
உங்கள் பெயரில் 22 வலைப்பூக்களா? வியப்பாக உள்ளது!
Post a Comment