
லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!
சுதந்திரதின விடுமுறை உற்சாகத்தில் உண்மைத் தமிழர் இருப்பதால், இன்று அரட்டைக் கச்சேரி இல்லை.
Over to Post
-----------------------------------------------------------------------
ஏன் பெண் உறங்கவில்லை!
கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..
பாடலின் முதல் பன்னிரெண்டு வரிகளைப் பாருங்கள்.
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை .. சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண் உறங்கவில்லை .. பெண் உறங்கவில்லை.
இளைஞர்கள் கேட்டது இதுதான்.
"உணர்வுகள் என்பது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதுதானே!
அப்படியிருக்கையில், உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம்? அதே காதல் உணர்வினால் அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா? சொல்லுங்கள்! இவள் உறங்காதது போல அவனும் உறங்கியிருக்க மாட்டானில்லையா? அப்படியிருக்கும்
போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள்? காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான். அது உங்களுக்குத் தெரியாதா?"" என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டார்கள்.
அவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற பத்திரிக்கை மூலமாகத்தான் இந்தக்
கேள்வியைப் பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள்.
கடிதங்கள் நூற்றுக் கணக்கில் வந்து குவிந்து விட்டது.
நம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக் கொடுத்து அனைவரையும்
சமாதானமடையச் செய்தார்.
அதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற படத்தில், தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பதில் எழுதியிருந்தார்.
"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"
என்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் இடையில்
"அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"
என்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர் இப்படி எழுதினார்:
"பெண் குலத்தைப் படைபதை நிறுத்திவை" என்று ஒரு காதலன் துக்க உணர்வு
மேலோங்கிப் பாடுவதாக எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக மொத்த பெண் குலமும் என்ன செய்யும்? கடவுளென்ன
அவன் வைத்த ஆளா? இவனுக்காக அவர் எப்படி பெண்ணைப் படைப்பதை நிறுத்துவார்?.
இதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப் படைப்பதை நிறுத்து
கடவுளே என்றால் என்ன ஆகும்?
ஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வுகளின் தாக்கத்தினால்
அவன் அப்படிப் பாடுகின்றான். அவனுடைய சூழ்நிலை அப்படி.
அதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும், தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை என்கிறாள்! அதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதுவும் தவறுதான். அது தவறில்லை என்றால்
இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்?" என்று வந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக்கேட்டு அவர்களையே உணர வைத்தார்.
மேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல் இதழில் இப்படி எழுதினார்.
"இந்த வானம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு பெண் கூட என்னைக் கேள்வி
கேட்கவில்லை. நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில்சொன்னேன்.
உங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள் பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது! திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு, நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை. அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்"
என்ன நிதர்சனமான உண்மை!
----------------------------------------------------------------------------

பாவாடை சட்டையும் பரமசிவன் வரமும்
ஒரு சம்பவத்தைச் சுவையாகச் சொல்வதில் கதாசிரியர்களுக்கும் கவிஞர்களுக்குமிடையே மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. பதினைந்து வரிகளில் சொல்லவேண்டியதை, உணர்வு மேலோங்கிடச் சொல்வதற்குக் கதாசியருக்கு நாற்பது வரிகள் தேவைப்படும்.ஆனால் சிறந்த கவிஞரால் அதை நான்கே வரிகளில் அசத்தலாகச் சொல்லிவிட முடியும்.எப்படியென்று பார்ப்போம்.
ஒரு ஏழைத் தாய். வறுமைதான் அவளுக்குத் துணைவன்.வீடுகளில் வேலை செய்து அரைவயிற்றுக் கஞ்சியோடு காலத்தை அவள் ஓட்டிக் கொண்டிருந்த நிலையில், அவளுடைய பதினோரு வயது நிரம்பிய மகள் வயதிற்கு வந்து விட்டாள். அவளுக்கு மகளாகப் பிறந்துவிட்ட அந்தப் பாவப்பட்ட சிறுமிக்கு இருப்பது இரண்டே உடைகள்தான் .ஒன்றை அவள் அணிந்து கொண்டிருக்கின்றாள்.மற்றொன்று வீட்டு வாசலில் உள்ள கொடியில் காய்ந்து கொண்டிருக்கிறது. பூப்படைந்துவிட்ட அந்தப் பெண்ணின் அவசரத் தேவைக்கு மற்றுமொரு மாற்று உடை இல்லாத நிலை. அந்த இருவருக்கும் ஒரே ஆதரவான அந்தப் பெண்மணியின் சகோதரனோ - காலக் கோளாறால் தற்சமயம் சிறையில் இருக்கிறான். அவன் இருந்திருந்தாலாவது இவர்களது வாட்டத்தைப் போக்குவான் அதை எண்ணி அந்த அன்புத்தாய் கண்ணீரோடு குடிசை வாசலில் அமர்ந்திருக்கின்றாள்.
தாயின் இந்தப் பரிதாப நிலைக்கு மனம் உருகி கவிஞர் வைரமுத்து
அவர்கள் பளிச்சென்று நம் மனதில் தைக்கும் விதமாகச் சிலவரிகளிலேயே இப்படிச் சொன்னார்
"பாவாடை சட்டையோ பரமசிவன் தந்தவரம்!
தாவணிக்கு எங்குபோவேன்?
தாவணி வேணுமின்னா மாமன் வரவேணும்
மாமன் வரவேணுமின்னா - ஜாமீனில் வரவேணும்!"
என்ன அற்புதமான வெளிப்பாடு பாருங்கள்!
நச்' சென்று இருக்கிறதல்லவா?
----------------------------------------------------------------------------------
நிலைமாறிய தமிழ்ப் படங்கள்
தாய், தந்தை,மனைவி, மக்கள் என்று குடும்ப உறுப்பினர்கள்
அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும் படியாகவா இன்றைய திரைப்படங்கள் இருக்கின்றன? நிச்சயமாக இல்லை!
தொலைக்காட்சியில் சில காட்சிகளைத் தங்கள் குழந்தைகளுடன் பார்க்கும் பெற்றோர்கள் நெளிய வேண்டியதிருக்கிறது, தலை குனிய வேண்டியதிருக்கிறது, அல்லது வேறு சானலை மாற்றவேண்டியதிருக்கிறது!
இந்த நாட்டு நடப்பு அவலங்களையெல்லாம் பார்த்த நமது கவிஞர் சிவல்புரியார் அவர்கள், கவியரசர் கண்ணதாசன் காலத்துப் பாடல் களைத்தன் மனதிற்குள் ஒரு ஆதங்கத்தோடு வைத்துக்கொண்டு தற்காலத் திரைபடப் பாடல்களையும், படங்ளையும் கீழ்க்கண்ட தனது பாடலின் மூலம் ஒரு பிடி பிடித்திருக்கின்றார்.
"நீயின்றி திரையுலகம் மாறிப் போச்சு
நிழல்கூட நிஜமென்று தேறிப் போச்சு
வாயினின்றி வரும்சொல்லே கவிதை யாச்சு
வளர்தமிழில் கொச்சைத் தமிழ் கூடலாச்சு
தாயோடு தாரத்தைச் சேர்த்து வைத்துத்
தமிழ்ப் படத்தைப் பார்க்கும்நிலை மாறிப்போச்சு"
சம்பந்தப்பட்டவர்கள் கண்களில் இந்தப் பாடல் பட்டு அவர்கள் ஓரளவாவது திருந்தினால் அது தமிழ் மக்களாகிய நாம் செய்த பாக்கியம் என்று கொள்வோம்!
-----------------------------------------------------------------------------------------
படமும் செய்தியும்
மனிதனுக்கு மட்டுமா? யானைக்கும் உண்டு!
மனிதனுக்கு மட்டுமா? யானைக்கும் உண்டு!
நன்றி தினமலர்!-------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை:
ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகன், பணம் வேண்டுமென்று கேட்காமல் கேட்டு எழுதிய கடிதமும், அதற்கு அவன் தந்தை எழுதிய பதில் கடிதமும் கீழே உள்ளன.
படித்து, (முடிந்தால்) மகிழவும்
Son And Father Exchange Letters:
Son to his father
Dear Dad,
$chool i$ really great. I am making lot$ of friend$ and $tudying very hard. With all my $tuff, I $imply cannot think of anything I need, $o if you would like, you can ju$t $end me a card, a$ I would love to hear from you.
Love,
Your $on.
Father replies
Dear Son,
I kNOw that astroNOmy, ecoNOmics, and oceaNOgraphy are eNOugh to keep even an hoNOr student busy. Do NOt forget that the pursuit of kNOwledge is a NOble task, and you can never study eNOugh.
Love,
Your Dad
-----------------------------------------------------------------
அவசியமான மூன்று ஈ’க்களும், எஃப்’ களும்
(E & F )
(E & F )
கனவுக் கன்னி?
ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
அம்மணி யாரென்று தெரிகிறதா?Sau saal pahele...muje tumse pyaruka புகழ். காதல் படங்களாக நடித்துத் தள்ளியவர்
இது மூத்த குடிமகன்களுக்காக மட்டுமே. இளைய திலகங்கள் உற்றுப் பார்ப்பதைத் தவிர்க்கவும்!
V
V
V
V
இளவட்டங்களுக்கான படம் அடுத்து உள்ளது!
V
V
V
V
V
====================================================வாழ்க வளமுடன்!





































































































